ஐபிஎல் மெகா ஏலத்தை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் நடத்துவதற்கு பதிலாக, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்துமாறு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் தாங்கள் பயிற்சியளித்து உருவாக்கிய சிறந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்வதுடன், இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவும் முடியும் என ஐபிஎல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மெகா ஏலங்களுக்கு இடையில் வீரர்களுடன் நேரடியாக சம்பளத்தை மறுபரிசீலனை செய்ய உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.