பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் ஸ்டாலின்! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Aug 9, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் ஸ்டாலின்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 07:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, திமுகவுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம்  எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்த அவரை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர்.

தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள். ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை/துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும், பல குற்றங்களில் திமுகவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும் வெளிப்படையாகத் தெரிய வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைக் கையாளும் முக்கியப் பொறுப்பில், மூன்று ஆண்டுகள் முன்பு வரை திமுக இளைஞரணித் துணைச் செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது, திமுகவின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Tags: Stalin abuses power in responsible government positions! - Annamalai allegation
Share
Tweet
SendShare
Previous Post

இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஐபிஎல் ஏலம்?

Next Post

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Related News

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies