மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்! - அண்ணாமலை வலியுறுத்தல்
Jun 24, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் போக்கினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடந்த 2018 – 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள் பலியான அவலம் தமிழகத்தில்தான் ஏற்பட்டது.

ஆனால், அதன் பின்னரும், தமிழகத்தில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் தொடர்வது வேதனைக்குரியது.

இன்றைய தினம், கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை அடைப்பு காரணமாக, கழிவு நீரை அகற்ற, தொழிலாளர்கள், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் காணொளிகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், மாற்று சுயதொழில் திட்டங்கள், இயந்திரமயமாகச் சுத்தம் செய்வதற்கான கருவிகள், வாகனங்கள் வாங்க மூலதன மானியம் ரூ.5,00,000 உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி உட்பட, பல்வேறு திட்டங்களையும், நிதி உதவிகளையும் அளித்து வருகிறது.

இவை தவிர, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்திற்கு, வரும் 2025-2026 ஆண்டுவரை ரூ. 349.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கையால் துப்புரவு செய்பவர்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பின்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும், பாதுகாப்பான, இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் புறக்கணித்திருப்பதோடு, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படாமல், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உரிமைகளுக்கே எதிரான திமுக அரசின் இந்த செயல்பாடு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமானது.

தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் போக்கினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும், அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையும்படி, திமுக அரசு செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை  வலியுறுத்தி உள்ளார்.

Tags: Human dumping of human waste should be banned immediately! - Annamalai emphasis
ShareTweetSendShare
Previous Post

பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் ஸ்டாலின்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

2030 குளிர்கால போட்டியை நடத்தும் பிரான்ஸ்!

Related News

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் – அதிமுக கவுன்சிலர்கள் மீது பேப்பர் வீச்சு!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies