கார்கில் போரின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் கார்கில் பகுதியில், கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. கடும் பனிப்பொழிவிற்கு இடையே நடைபெற்ற இந்த போரில், இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டு பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடித்தனர்.
இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 25-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது, இதனை முன்னிட்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு, திராஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.