சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் தரமான தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் கழிவுநீர் மற்றும் மழைநீர் திருவொற்றியூர் மேற்கு பகுதிக்குள் செல்லாமல் இருப்பதற்காக பொதுப்பணித்துறையால் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மணலி புதிய பாலம் அருகே 50 மீட்டர் தூரத்திற்கு அந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.