மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் நேற்று மாநிலம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.
புனே, மும்பை, பால்கர், தானே மற்றும் ராய்காட் ஆகிய நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தானே, ராய்காட், புனே, பால்கர், மற்றும் மும்பையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புனேயின் பல்வேறு பகுதிகள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. . கடந்த 10 நாட்களில் 94 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 145 பேர் காயமடைந்ததாக கவல் வெளியாகியுள்ளது.