ஜனரஞ்சகமான திரைப்படங்களை மக்கள் விரும்புவதால் ஆக்சன் படத்தில் விரும்பி நடிப்பதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
‘ரெட்ட தல’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் நடைபெற்றது. இதில் கதாநாயகனாக நடிக்கும் அருண் விஜய் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் தந்தை திரைத்துறையில் நாட்டாமை படத்தில் முத்திரை பதித்தது போல் அதுபோல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என தெரிவித்தார்.