இந்திய பங்குச் சந்தையின் குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்த நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கியதும் 537.66 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 573 புள்ளிகளாக காணப்பட்டது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 188.10 புள்ளிகள் உயர்வடைந்து 24 ஆயிரத்து 594 புள்ளிகளாக வர்த்தகமானது.