மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.
2018-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பாஜகவை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி உத்தரபிரதேசத்திலுள்ள சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.