சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரை சேர்ந்த சாமுவேல் ராஜ், தமது இருசக்கர வாகனத்தில் கிண்டியில் உள்ள கத்திபாரா மேம்பாலத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, இளைஞர் சாமுவேல் ராஜ் திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இளைஞரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.