கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், சிபிசிஐடி போலீசார் சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி சயான் மற்றும் ஜித்தின் ஜாய், அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், சிபிசிஐடி போலீசார் மற்றும் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆஜராகினர்.
அப்போது, குற்றவாளிகளிடம் தொலைபேசியில் பேசிய நபர்கள் வெளிநாட்டில் உள்ளதால், அவர்களை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீசார் உதவியை நாடியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.