மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் நண்பன் பட பாணியில் செல்போனில் ஆலோசனை பெற்று பார்த்த பிரசவத்தில் அழகிய இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
சமீபத்தில் பெய்த மழையில் அங்குள்ள ஜோராவாடி கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த ரவீணா உய்கே என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
மழையால் மருத்துவக் குழுவினர் வர முடியாததால், அதே கிராமத்தைச் சேர்ந்த மருத்துவச்சி ஒருவரே செல்போனில் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்துள்ளார். மறுநாள் வெள்ளம் வடிந்ததும், ரவீணாவும், அவருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.