பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நிலையில், முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, அரசு போக்குவரத்து நிறுவனமான எஸ்என்சிஎப் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை மீண்டும் வழக்கமான போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.