பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்று பிரான்ஸ் நாட்டில் தொடங்கும் நிலையில், இந்த விளையாட்டு திருவிழாவை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடூல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க விழா அணிவகுப்பு பிரான்ஸ் நாட்டில் உள்ள சீன் நதியில் நடைபெறுகிறது. இதில் வீரர்கள், வீராங்கனைகள் படகில் பயணித்த படி அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
இதனைக் குறிப்பிடும் வகையில் நீரில் சில பிராணிகள் மிதந்த படி பயணிப்பது போன்ற அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.