கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மேப்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ மகா விஷ்ணு கோயிலில் தலைமை பூசாரியாக உள்ள மதுசூதனன் என்பவருக்கு லாட்டரி சீட்டில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
பூசாரி மதுசூதனனுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இதனால், மதுசூதனனும், அவரது குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.