இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின் படி, கடந்த 2019ம் ஆண்டில் 96 புலிகளும், 2020ம் ஆண்டில் 106 புலிகளும், 2021ம் ஆண்டில் 127 புலிகளும், 2022ம் ஆண்டில் 121 புலிகளும், 2023ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன.
இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 349 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் மட்டும் 200 பேர் புலிகள் தாக்கியதில் பலியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.