அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ், “தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கும் அதேவேளையில் காசாவில் நிலவும் மனித துயரத்தின் வீச்சு பற்றிய தமது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் தாம் அமைதியாக இருக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இஸ்ரேல் விவகாரத்தில் கமலா ஹாரிஸ் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.