ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சூழலியல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டதால் விமான சேவை ரத்தானது.
ஐரோப்பாவில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு விமான போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் அதிகப்படியான எரிபொருள் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் விளைவு மற்றும் அதனால் காலநிலை மாற்றம் சார்ந்து எழும் அச்சுறுத்தலை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.