அமெரிக்காவைச் சேர்ந்த ஆரோ தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓ, இந்திய பொறியாளர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.
அந்நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்யும் இந்திய ஊழியர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து அவரை விடுப்பு எடுத்துக் கொள்ளும்படி சி.இ.ஓ ரோஷன் படேல் வலியுறுத்தியுள்ளார். அப்போது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய தமக்கு விடுப்பு வேண்டாம் என ஊழியர் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, இந்திய ஊழியர் குறித்து தனது சமூக வலைதளத்தில் சி.இ.ஓ ரோஷன் படேல் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.