ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கு அதிரடியாக 15 ஆயிரம் ரூபாய் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய சுதந்திர தினம் என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் எக்ஸ்440 பைக்கின் மிட்-வேரியண்ட்டான விவிட்-க்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 விவிட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பு 2 லட்சத்து 59 ஆயிரத்து 500ஆக இருந்தது.
ஆனால், இனி இந்த வேரியண்ட்டை 2 லட்சத்து 45 ஆயிரத்தில் வாங்க முடியும். கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 459 ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்குகள் மட்டுமே விற்பனையானதால் வாடிக்கையாளர்களை கவர சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.