ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் தனது மின்சார ஸ்கூட்டர் வணிகத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த செப்டம்பர் 2023-ல் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் 4 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், ஓலா நிறுவனம் தனது இலக்கை மாற்றி அமைத்துள்ளது.