உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. கௌதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அமைச்சர் பொன்முடியின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் சோதனை நடைபெற்று, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோருக்கு சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் குவாரிகளில் அளவுக்கதிகமாக செம்மன் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை துறை எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.