வேலூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் காவலர் சங்கர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர் சங்கர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோர், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக தொடர் புகார் எழுந்தது. மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.
இதன் அடிப்படையில், காவலர் சங்கர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.