மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கபினி அணையில் இருந்து 19 ஆயிரத்து 250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து 93 ஆயிரத்து 828 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணை 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக சேலம், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















