சவுதி அரேபியாவில் சிக்கி தவித்தவரை மீட்டு ஆந்திராவுக்கு அழைத்து வந்த அமைச்சர் நாரா லோகேசிற்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கோனசீமா மாவட்டம் அஞ்சுக்புடி கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திரா என்பவர் ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்டு சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சிக்கி தவித்த அவர், தன்னை மீட்குமாறு அமைச்சர் லோகேஷிடம் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அறிந்த அமைச்சர் நாரே லோகேஷ் அவரை ஆந்திராவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் படி சொந்த ஊர் திரும்பிய வீரேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.