பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டி குறித்த விரிவாக பார்க்கலாம்.
பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் -குவாதமாலா வீரருடன் மோதுகிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக்ஷெட்டி அணி – பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது. மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இதில் தனிஷா மற்றும் அஸ்வினி பொன்னப்பா அணியினர், தென்கொரிய அணியுடன் மோதுகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் பிரீத்தி பவார் – வியட்நாம் வீராங்கனையான தி கிம் ஆன்வோ உடன் மோதுகிறார். இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியும் – நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் – ஜயித் அபோவுடன் மோதுகிறார்.
இரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் – பிரான்ஸ் வீரர் காரென்டின் உடன் மோதுகிறார்.