தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சாரம் ரயில் மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர் இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வருகைதந்த மின்சார ரயில், ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயில் மீது மனநலம் பாதிக்கப்பட்டவர் ஏறினார்.
இதனையடுத்து ரயிலில் இருந்து அவர் இறங்க மறுத்ததால் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சமபவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அவரை கீழே கொண்டு வந்து மீட்டனர்.