“திரைப்படத்தின் புரமோஷனுக்கு நடிகர்கள் ஒத்துழைக்காவிட்டால், அவர்களை வைத்து படம் பண்ண மாட்டோம் என தயாரிப்பாளர்கள் தைரியமாக முடிவு எடுங்கள்” எனவும், “அதற்கு பெப்சி சம்மேளனம் துணை நிற்கும்” என்றும் திரைப்பட இயக்குநர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.கே செல்வமணி, எழில், தயாரிப்பாளர்கள் சிவா, கே. ராஜன், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குனர் ஆர்.கே செல்வமணி,
நான் வரவில்லை என்றால் இயக்குனர் யூனியனை கலாய்த்து இருப்பார் என்று வந்து விட்டதாக ஜாலியாக கலாய்த்து பேசியவர், டெலிவரியை போல ஒவ்வொரு படமும் வெளிவருவது ரொம்ப கஷ்டம். ஒரு படத்தை தயாரிப்பது உண்மையில் கஷ்டம் தான். ஆனால் அதை திறம்படச் செய்தால் அந்த கஷ்டம் இருக்காது. டிரெய்லர் பார்க்கும் போது நன்றாக இருந்தது.
என் படமும் ரிலீஸ் ஆகும் போது ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கு முன்னாடி அவ்வளவு பேசுனாங்க. சினிமாவில் எதுவும் நடக்கும். அசோக் செல்வனும் ரொம்ப நாகரிகமான பண்பான மனிதர் தான். ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் படத்தின் ரிலீஸ்க்கு வர வேண்டும்.
படத்தின் வெற்றிக்கு ஹீரோ, ஹீரோயினுக்கு 80 சதவிகிதம் லாபம். ஆனால் தயாரிப்பாளர் & இயக்குனர் நிலைமை அதே மாதிரி தான் இருக்கும். 5 முதல் 10 சதவீதம் லாபம் பெறும் தயாரிப்பாளர் புரமோஷனுக்கு ஒர்க் பண்ணும் போது 90 சதவீதம் வரை லாபம் பெறும் நடிகர்கள் ஏன் அதை செய்வதில்லை? தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் திருமலை பொது வெளியில் இப்படி பேசுவது நல்லதல்ல . அதை சங்கத்தில் பேசி இருக்கலாம். இன்றைக்கு தயாரிப்பாளர் எல்லாம் கோடீஸ்வரர் தான். இந்த திட்டமிடுதல் தான் தயாரிப்பாளர் & டெக்னீசியனுக்கு இல்லை.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தோம், எல்லாம் சரியாக இருக்கிறதா? அக்ரிமென்ட் சரியாக இருக்கிறதா என்று கேட்போம். இப்போது கோடிக் கணக்கில் பணம் செலவாகிறது. பெப்சி சங்கம் சரியாக இருக்கிறது.
எந்த திட்டமிடுதலும் இல்லை. இன்றைக்கு சிறிய படங்களுக்கு யாரும் கடன் கொடுக்க தயாராக இல்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து சரியான வழிமுறைகளை கொண்டு வந்தால் தேவையில்லாத பிரச்சினை வராமல் இருக்கும். இதை பின்பற்றினால் 60 முதல் 80 சதவீதம் தமிழ் சினிமா மாறுபடும். வருமானம் வரும்.
நான் வாங்கிய பாடலை ஒரு மேடையில் நான் பயன்படுத்த பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. வருமானம் வரும் வழிகளை கண்டறிந்து அதன் படி திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கத்திற்காக மட்டும் நான் பேசவில்லை. தமிழ் சினிமாவுக்காக பேசுகிறேன் இது ஒரு வீடு. மொத்த தமிழ் சினிமாவும் இணைந்து செயல்பட்டால் இந்த வீட்டில் இயக்குனர் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் நன்றாக இருக்கலாம்.
எந்த திரைப்படத்துக்கும் புரமோஷனுக்கு நடிகர்கள் ஒத்துழைக்கா விட்டால் இனிமேல் அவர்களை வைத்து படத்தை பண்ண மாட்டோம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள் என்றும், உங்கள் முயற்சிக்கு பெப்சி சம்மேளனம் துணையாக இருக்கும் என்றும், தயாரிப்பு துறை நன்றாக இருந்தால் தான் திரையுலகம் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன்,
தமிழில் டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் காலத்தில் நிறைய டைட்டில் ஆங்கிலத்தில் வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே வைத்துள்ளார்கள்.
இந்த புரமோஷனுக்கு கூட ஹீரோ, ஹீரோயின் வரவில்லை என்று தயாரிப்பாளர் திருமலை தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சங்கங்கள் சார்பில் சில திட்டங்களை போட்டாலும் அதை மீறுபவர்கள் ஹீரோ ஹீரோயின்.
டப்பிங் பேசுவதற்கு முன் பணம் வேண்டும் என்றால் அசிங்கமாக இல்லையா? உன்னை வைத்து படம் எடுக்கிறோம். நம்பிக்கை இல்லையா? ரிலீஸ்க்கு பணக் கஷ்டம் இருந்தால் அந்த நடிகர் கொடுத்து உதவ முன் வர வேண்டும். சரத்குமார், ஜெய்சங்கர் போன்றவர்கள் உதவி செய்தாங்க. ஆனால் இவர் ( அசோக் செல்வன்) புரமோஷனுக்கே வரவில்லை என்றால்
தயாரிப்பாளர்கள் அடிமையா என்று அசோக் செல்வனை பற்றி பேசியவர், நீ என்ன அவ்ளோ பிஸி ஆகிட்டியா? ஒரு இயக்குனர் இல்லை என்றால் ஒரு ஹீரோ & ஹீரோயின் இல்லை. யாராக இருந்தாலும் தலைக்கணம் இருக்க கூடாது. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?
ஒரு ஹீரோயினை ஹிந்தியில் தேடி தமிழில் கொண்டு வந்து போடுறாங்க. பாம்பேயில் வீட்டிலிருந்து விமான நிலையம் வரை நான்கு பவுன்சர் பிறகு சென்னையில் நான்கு பவுன்சர் கொண்டு வந்து விட வேண்டும். நீ என்ன அவ்வளவு பெரிய தீவிரவாதியா நீங்க. உன்னை கொலை செய்வதற்கு ஆளுங்களா சுற்றி கொண்டு இருக்கிறார்கள்? நான் பவுன்சர்களை குறை சொல்லவில்லை. ஹீரோ ஷீட்டிங் போய் விட்டு கேரவனுக்குள் வர்ற வரைக்கும் பவுன்சர் இருக்கனும். என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு? ரொம்ப வேதனையாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஹீரோ வேண்டாம் என்று சொல்வதற்கு தைரியம் இல்லை. சில கஷ்டங்களை தயாரிப்பாளர்களுக்கு செயற்கையாக கொடுக்கிறார்கள்.
இதற்கு தயாரிப்பாளர் சங்கம் தான் முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஆந்திரா, கேரளா தயாரிப்பாளர் சங்கத்தை உதாரணமாக கூறியவர்,
ஆந்திராவில் ஒரு வில்லன் நடிகருக்கும் & ஒரு நடிகைக்கும் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்தாங்க ( பணத்தை வாங்கிட்டு ஷீட்டிங் வரல என்று) அடுத்து யாரும் கூப்பிடல. பிறகு அபராதம் செலுத்திய பிறகு தான் நடிக்க ஆரம்பித்தாங்க. அவர்கள் வேறு யாருமில்லை. பிரகாஷ் ராஜ் & சிம்ரன் தான் ( அப்போது). தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்லவில்லை. தயாரிப்பாளரை வேதனை படுத்திய ஹீரோ யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்கிறேன் என்றும் கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன்,
ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் தான் திரையுலகம் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் மிகவும் இன்னலுக்கு உட்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தயாரிப்பாளரை மீட்டெடுத்தால், திரையுலகம் சார்ந்த ஏராளமான தொழிலாளிகள் பலனடைவார்கள். இப்போது இருக்கும் தேக்க நிலையை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,
நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், உரிமையாளர் சங்கம் , விநியோகஸ்தர் சங்கம் ஒன்று கூடி , எதிர்காலத்தில் தமிழ் திரையுலகம் எப்படி இருக்க வேண்டும் என்று சில முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார்கள். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.