நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உண்மைக்குப் புறம்பான தகவலை கூறி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி தாம் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதாக கூறி, வெளிநடப்பு செய்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மம்தா பானர்ஜியின் மைக் அணைக்கப்பட்டதாக கூறியது முற்றிலும் தவறானது என்றும், ஒவ்வொரு முதல்வர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
தவறான கட்டுக்கதைகளைப் புனைவதை தவிர்த்து, மம்தா பானர்ஜி உண்மையை பேச வேண்டுமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.