தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் முதல் நாளில் 12 கோடி ரூபாய்கும் மேல் வசூலித்துள்ளது என தெரியவந்துள்ளது.
தனுஷின் 50வது படமான ராயன் படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.