அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் விவாகரத்து கிடைத்ததை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.
அவரது கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஊதா நிற லெஹங்கா உடையணிந்த அந்த பெண் விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள் என்ற பின்னணிப் பலகையுடன், பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
வீடியோவைப் பார்த்த பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் விவாகரத்தை கொண்டாடினால், திருமணம் செய்வதைக் கண்டு மக்கள் அஞ்சும் நிலை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளனர்.