ராகுல் டிராவிட் ஒரு தன்னலமற்ற வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளரான பின்னர் முதல் முறையாக இந்தியா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறது. இதனையடுத்து ராகுல் டிராவிட் கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்தே கௌதம் கம்பீர், ராகுல் டிராவிட்டிம் தற்போதைய மற்றும் அடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.