அரசியல் காரணங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அன்புமணி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மின்சார கட்டண உயர்வால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கிட்டால் 18 முதல் 20 விழுக்காடு கட்டணம் குறையும் எனவும் தெரிவித்தார்.