மாஞ்சோலை விவகாரத்தில் அங்கு வசிப்பவர்களை தமிழக அரசு திட்டமிட்டு வெளியேற்ற துடிக்கிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு தவறு செய்கிறது எனவும், மாஞ்சோலையில் உள்ளவர்களிடம் மிரட்டி கையொப்பம் வாங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.