ஐ ஷோ ஸ்பீடு என்ற பெயரில் பிரபலமான யூ-டியூபர் ஸ்ட்ரீமர் என்பவர் சமீபத்தில் வேகமாக வரும் காரில் தாவிக்குதித்து தாண்டியபடி வீடியோ பதிவு செய்தார்.
அதில், ஸ்ட்ரீமருக்காக, அவரது தந்தை தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
வேகமாக வரும் காருக்கு முன்னே தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீமர் சரியான நேரத்தில் காரில் தாவிக்குதித்து, உயரம் தாண்டும் வீரர் போல அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் கம்பீரமாக நிற்கிறார்.
இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.