பட்ஜெட்டில் தமிழக ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற பட்ஜெட் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழக மக்களை பிரதமர் மோடி நேசிப்பதால், அவருக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் வடக்கு, தெற்கு பிரச்னையை திமுகவினர் கையில் எடுப்பதாக குற்றம்சாட்டினார்.
பட்ஜெட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டிலேயே அதிகளவாக தமிழகத்தில்தான் ஆறு வந்தே பாரத் ரயில்கள் இயங்குவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தமிழ்க் கலாசாரத்தை மதிப்பதால்தான் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியதாக கூறிய அவர், ஒவ்வொரு திட்டத்திலும் தமிழகத்துக்கு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.