முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, ஆந்திராவில் அவரது உருவபடத்துக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையொட்டி, எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகின் அறிவியல் அரங்கில் நமது தேசத்தின் திறமைமிக்க பரிமாணத்தை முன்வைத்த அறிவியலாளராக திகழ்ந்த அப்துல் கலாம், தனது எளிமையான நடைமுறைகளாலும், செயல்பாடுகளாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட தலைவராக வாழ்ந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தனது அளப்பரிய சாதனைகள் மற்றும் கருத்துகள் வழி, மறைந்தும் நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல்கலாமை பெருமையுடன் நினைவு கூர்வதாக அந்தப் பதிவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.