சாவர்க்கர் குறித்து தவறான கருத்து கூறியதற்காக இயக்குநர் சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி அளித்தார். அதில் சாவர்க்கர், மனைவியை படிக்க கட்டாயப்படுத்தினார் என தெரிவித்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா திரித்து பேசியதாக விமர்சித்தனர்.
இதனையடுத்தே சுதா கொங்கரா தனது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.