தமிழகத்தில் பொறியியல் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27ம் தேதி வரை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு 25ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்த நிலையில் மாணவர்களுக்கான ஒதுக்கீடு ஆணை இன்று வழங்கப்படவுள்ளது
இந்நிலையில் ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறவுள்ளது.
இதேபோன்று தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஒரே சுற்றாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது(OUT).