நூறு கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை வரும் 31 -ஆம் தேதி வரை காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடியாக அபகரிக்க முயன்ற வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை கைது செய்த சிபிசிஐடி போலீசார், 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரித்விராஜை வரும் 31 -ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.