திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டுக்குள் நுழைந்து 80 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், உரக்கடை நடத்தி வருகிறார். இவர் அடகுவைத்த நகைகளை வங்கியில் இருந்து மீட்டு வீட்டில் வைத்துவிட்டு சுற்றுலா சென்றுள்ளார்.
அவரது தாயார் மின்னல்கொடி மட்டும் வீட்டில் தனியாக இருந்த வேளையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து நகை மற்றும் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த மின்னல்கொடி, காவல்நிலையத்தில் புகாரளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன