சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் இளையான்குடி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்வகுமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்க முயன்றார். அப்போது, உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிவகங்கையில் கடந்த 3 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.