கோவையில் நடைபெற்ற GUTS என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் எழுதிய GUTS என்னும் புத்தக வெளியீட்டு விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக தலைவர் அன்புமணி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்கியவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மருத்துவர் பழனிவேல் குறித்து மேடையில் பேசினார்.
பின்னர் மேடையை விட்டு கீழே வந்த அண்ணாமலையை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கட்டித் தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகர் ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர்.