புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டை காட்சிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் போட்டிபோட்டு செல்பி எடுத்தும், போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.