மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் ஈரோட்டில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது. இந்த நிலையில் பவானி தாலுகாவிற்கு உட்பட்ட கந்தன் பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு மாவட்டம் நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.