விடுமுறை தினத்தை ஒட்டி தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளதால், மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலாப்பயணிகள் வரிசையில் காத்திருந்து குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தற்காலிகமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
(பிரீத்)