மத்திய அரசு ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமன்னா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாடு பணிகளை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “140 ஆண்டுகள் பழமையான புதுச்சேரி ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மாற்றுவதற்காக 93 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருதாகவும், விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.