பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
33- வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. போட்டியில் 13 தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் உட்பட 117 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய அவர், 221 புள்ளி 7 புள்ளிகளுடன் 3- ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.