ஜாமீன் விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த குற்ற வழக்குகளில், சந்தேகம் நிலவும்பட்சத்தில், ஜாமீனை மறுத்து கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென விரும்புவதாக குறிப்பிட்டார்.
கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுவதாக கூறிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இதனால் ஒருவர் தன்னிச்சையாக கைதாகும்பட்சத்தில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக ஜாமீன் விவகாரத்தில்பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தினார்.