மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதை வரவேற்று நாகை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. டெல்டா மாவட்ட பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதை வரவேற்கும் வகையில் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மேலும், 18 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி பணிகளை முடுக்கி விடவேண்டும் எனவும், சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.